மேஷம் : அசுவினி: புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். நன்மையான நாள்.
பரணி: திட்டமிட்டு செயல்படுவீர்கள். கடந்த கால உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
கார்த்திகை 1: பணியிடத்தில் உங்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். சங்கடங்கள் விலகும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: மதியம் வரை குழப்பம் நீடிக்கும். அதன்பின் முயற்சிகள் பலிதமாகும்.
ரோகிணி: அரசு வழியில் எதிர்பார்த்த நன்மைகளை மதியத்திற்கு மேல் அடைவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: சங்கடங்களை தாண்டி நினைத்ததை அடைவீர்கள். முன்னேற்றமான நாள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: மதியம் வரை அலைச்சல் அதிகரிக்கும். அதன் முயற்சி வெற்றியாகும்.
திருவாதிரை: செயலில் மட்டும் கவனம் செலுத்துங்கள். விருப்பம் ஒன்று நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3: விழிப்புடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்

கடகம் : புனர்பூசம் 4: மதியம் வரை எதிர்பார்ப்பு நிறைவேறும். அதன்பின் செலவுகள் அதிகரிக்கும்.
பூசம்: எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். மதியத்திற்கு மேல் அலைச்சல் அதிகரிக்கும்
ஆயில்யம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள். எண்ணம் நிறைவேறும்.

சிம்மம் : மகம்: தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும். சேமிப்பு உண்டாகும்.
பூரம்: தொழிலில் இருந்த பிரச்னைகள் விலகும். பணவரவு அதிகரிக்கும்
உத்திரம் 1: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.
அஸ்தம்: பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறும். அதிகாரிகளின் உதவி கிடைக்கும்.
சித்திரை 1, 2: புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். நண்பர்கள் ஆதரவுண்டு.

துலாம் : சித்திரை 3, 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி மதியத்திற்கு மேல் விலகும்.
சுவாதி: செயல்களில் இருந்த தடை விலகும். முயற்சி மதியத்திற்கு மேல் நிறைவேறும்.
விசாகம் 1, 2, 3: தடைகளைத் தாண்டி சாதிப்பீர்கள். எதிர்பார்த்த தகவல் வரும்.

விருச்சிகம் : விசாகம் 4: மதியம் வரை உங்கள் செயல்களில் சாதகமான நிலையை காண்பீர்கள்.
அனுஷம்: மதியத்திற்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செயல்களில் கவனம் தேவை.
கேட்டை: மதியம் வரை சாதகங்களை அடைந்தாலும் அதன்பின் சங்கடம் வரலாம்.

தனுசு : மூலம்: துணிச்சலால் நினைத்ததை சாதிப்பீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.
பூராடம்: எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். முயற்சி ஒன்று நிறைவேறும்.
உத்திராடம் 1: நண்பர்களின் உதவியுடன் உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: அரசு வழியில் எதிர்பார்ப்பு நிறைவேறும். பகைவர் தொல்லை விலகும்.
திருவோணம்: உங்கள் மீது ஏற்பட்ட பழி விலகும். மறைமுக எதிரியை கண்டு விலகுவீர்கள்.
அவிட்டம் 1, 2: அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்

கும்பம் : அவிட்டம் 3, 4: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். குடும்பத்தில் செல்வாக்கு கூடும்.
சதயம்: பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். புதிய முயற்சி ஒன்று லாபமாகும்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்ப்பு நிறைவேறும். செயல்களில் சாதகமான நிலை உண்டாகும்.

மீனம் : பூரட்டாதி 4: மதியத்திற்கு மேல் நெருக்கடி வரலாம். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
உத்திரட்டாதி: பணிகளில் கவனம் தேவை. அதிகாரியின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.
ரேவதி: பணியில் சகஊழியர் ஆதரவால் பிரச்னையில் இருந்து வெளி வருவீர்கள்.