இன்றைய ராசி பலன் – ஜூலை 30,07,2022

0
200

மேஷம் : அசுவினி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்கள் முயற்சி ஒன்று லாபம் தரும்.
பரணி: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: மதியம் வரை இழுபறியாக இருந்த வேலை மாலையில் நடந்தேறும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: மதியம் வரை துணிச்சலாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள்.
ரோகிணி: அரசு வழியில் மதியத்திற்கு மேல் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும்.
மிருகசீரிடம் 1, 2: எந்த செயலிலும் அலட்சியம் வேண்டாம். யோசித்து செயல்படுங்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நீண்டநாள் எண்ணம் பூர்த்தியாகும். மதியத்திற்கு மேல் முயற்சி நிறைவேறும்.
திருவாதிரை: சகோதரர்கள் வழியில் நன்மைகள் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு லாபம் தரும்.
புனர்பூசம் 1, 2, 3: தைரியமுடன் செயல்பட்டு விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

கடகம் : புனர்பூசம் 4: மதியம் வரை செயல்கள் இழுபறியானாலும் அதன்பின் முயற்சி பலிதமாகும்.
பூசம்: இரண்டு நாட்களாக இருந்த குழப்பங்கள் மதியத்திற்கு மேல் விலகும்.
ஆயில்யம்: கடந்த கால படிப்பினையைக் கொண்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

சிம்மம் : மகம்: பொருளாதார நெருக்கடி விலகும். மதியத்திற்கு மேல் நிலைமை சீராகும்.
பூரம்: செலவுகள் கட்டுக்குள் வரும். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
உத்திரம் 1: கவனமுடன் செயல்பட்டு பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். நிதிநிலை உயரும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: மதியம் வரை எதிர்பார்ப்பு நிறைவேறும் அதன்பின் செலவு அதிகரிக்கும்.
அஸ்தம்: உங்கள் முயற்சிகள் மதியத்திற்கு மேல் இழுபறியாகும். கவனமுடன் செயல்படுங்கள்.
சித்திரை 1, 2: மதியத்திற்கு மேல் எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள். சிந்தித்து செயல்படுங்கள்.

துலாம் : சித்திரை 3, 4: எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். செயல்கள் நன்மையாகும்.
சுவாதி: தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.
விசாகம் 1, 2, 3: நீண்ட நாளாக இழுபறியான முயற்சி மதியத்திற்கு மேல் நிறைவேறும்.

விருச்சிகம் : விசாகம் 4: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் முயற்சி ஆதாயமாகும்.
அனுஷம்: தொழிலை விரிவு செய்வீர்கள். எதிர்பார்த்தவற்றில் நன்மை காண்பீர்கள்.
கேட்டை: நினைத்ததை நிறைவேற்றி லாபம் காண்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.

தனுசு : மூலம்: இரண்டு நாளாக ஏற்பட்ட நெருக்கடி மதியத்திற்கு மேல் விலகும்.
பூராடம்: மதியம் வரை குழப்பம் நீடிக்கும். அதன்பின் தெளிவுடன் செயல்பட்டு லாபமடைவீர்கள்.
உத்திராடம் 1: கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: மதியம் வரை மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதன்பின் நிலை மாறும்.
திருவோணம்: மதியத்திற்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செயலில் கவனம் தேவை.
அவிட்டம் 1, 2: புதிய முயற்சிகள் இழுபறியாகும். விழிப்புணர்வு அவசியம்.

கும்பம் : அவிட்டம் 3, 4: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
சதயம்: குடும்பத்தினருடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூரட்டாதி 1, 2, 3: முயற்சிகள் நன்மையாகும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும்.

மீனம்: பூரட்டாதி 4: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
உத்திரட்டாதி: தடைபட்ட பணிகளை மீண்டும் தொடர்வீர்கள். மனதில் நம்பிக்கை உருவாகும்.
ரேவதி: குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here