மேஷம்: அசுவினி: இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடை, தடங்கல் என்ற நிலை ஏற்படும்.
பரணி: பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.
கார்த்திகை 1: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மை ஏற்படாமல் போகும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
ரோகிணி: பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆதரவால் உங்கள் முயற்சிகள் ஆதாயமாகும்.
மிருகசீரிடம் 1, 2: வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: விஐபிகளின் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும். செல்வாக்கு உயரும்.
திருவாதிரை: விரைந்து செயல்பட்டு ஒரு செயலை முடிப்பீர்கள். எதிர்பார்த்த வருவாய் உண்டு.
புனர்பூசம் 1, 2, 3: எதிர்ப்புகள் விலகும். உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு உண்டாகும்.

கடகம்: புனர்பூசம் 4: எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்கள் வழியில் ஆதாயம் காண்பீர்கள்.
பூசம்: நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாள். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
ஆயில்யம்: புதிய ஒப்பந்தத்தில் கையொப்பம் போடுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.

சிம்மம்: மகம்: தாய்வழி உறவுகளால் நன்மை உண்டு. முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
பூரம்: சக பணியாளர்கள் மறைமுகமாக தொல்லை அளிப்பர். எச்சரிக்கை அவசியம்.
உத்திரம் 1: வரவு அதிகரிக்கும் என்றாலும் தொழிலில் கூடுதல் முயற்சி தேவைப்படும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். பொருள் சேர்க்கை உண்டாகும்.
அஸ்தம்: வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும். லாபம் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2: பல நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும்.

துலாம்: சித்திரை 3, 4: குடும்பத்தில் தோன்றிய சலசலப்பு விலகும். தம்பதி இடையே ஒற்றுமை கூடும்.
சுவாதி: எதிர்பார்த்த செய்தி வரும். வேலை வாய்ப்பிற்குரிய முயற்சி வெற்றியாகும்.
விசாகம் 1, 2, 3: உறவினர்களின் சுய ரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். வழக்கில் வெற்றி காண்பீர்கள்.

விருச்சிகம்: விசாகம் 4: முயற்சியில் குழப்பம் உண்டாகும். உங்கள் நினைப்பிற்கு மாறாக சில செயல்கள் நடைபெறும்.
அனுஷம்: பணியாளர்களுக்கு பொறுப்பு கூடும். சிலருக்கு சகபணியாளருடன் பிரச்னை உண்டாகும்.
கேட்டை: அவசர வேலைக்காக பிறரது உதவியை எதிர்பார்ப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.

தனுசு: மூலம்: வரவை விட செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கவனமுடன் செயல்படுங்கள்.
பூராடம்: சக பணியாளர்களுடன் அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.
உத்திராடம் 1: எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். போட்டிகளை சமாளித்து முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: புதிய நட்பின் வழியே எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவால் மகிழ்ச்சி காண்பீர்கள்.
திருவோணம்: எதிர்பார்த்த வருவாய் உண்டு. முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
அவிட்டம் 1, 2: வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். தொழிலில் ஆதாயம் உண்டு.
சதயம்: பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
பூரட்டாதி 1, 2, 3: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். நண்பர்கள் உதவி நன்மையை உண்டாக்கும்.

 

மீனம்: பூரட்டாதி 4: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி விலகும். பழைய பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள்.
உத்திரட்டாதி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.
ரேவதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும்.