மேஷம் : அசுவினி: போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். வரவு செலவில் கவனம் தேவை.
பரணி: திடீர் செலவுகளை சந்திப்பீர்கள். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு உண்டாகும்.
கார்த்திகை 1: பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். திட்டமிட்ட செயல்களில் அதிக முயற்சி தேவைப்படும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: உங்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.
ரோகிணி: வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: நினைத்தது நிறைவேறும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் உங்கள் முயற்சிகள் நிறைவேறும். குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும்.
திருவாதிரை உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். புதிய முயற்சி வெற்றி பெறும்.
புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தில் இருந்த தடைகளை சரி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

கடகம்: புனர்பூசம் 4: நெருக்கடிகள் விலகும். குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.
பூசம்: தடைபட்ட வேலைகள் மீண்டும் நடைபெற ஆரம்பிக்கும். லாபம் அதிகரிக்கும்.
ஆயில்யம்: வியாபாரத்தில் மாற்றம் செய்வீர்கள். புதிய ஆட்களை வேலையில் சேர்ப்பீர்கள்.

 

சிம்மம்: மகம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும்.
பூரம்: சந்திராஷ்டமம் என்பதால் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். முயற்சிகள் தாமதமாகும்.
உத்திரம் 1: வேலைப்பளு அதிகரிக்கும். மற்றவர்களின் செயல்கள் உங்களை சங்கடப்படுத்தும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: புதிய முயற்சி ஆதாயத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு செயல் நிறைவேறும்.
சித்திரை 1, 2: உங்கள் திறமை வெளிப்படும். வீட்டிற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4: எதிர்ப்புகளை முறியடித்து உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.
சுவாதி: நண்பர்களின் ஒத்துழைப்புடன் செயலில் வெற்றி காண்பீர்கள். வெளியூர் பயணம் நன்மை தரும்.
விசாகம் 1, 2, 3: பணியிடத்தில் உங்கள் உழைப்பிற்கு மதிப்பு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: விசாகம் 4: மற்றவர்களை நம்பி ஒப்படைக்கும் வேலைகள் இழுபறியாகும். செயல்களில் கவனம் தேவை.
அனுஷம்: தொழிலை விரிவு படுத்தும் முயற்சி நிறைவேறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கேட்டை: தொழிலில் உங்களுடன் கூட்டு வைத்துக் கொள்ள ஒருவர் தேடி வருவார்.

தனுசு: மூலம்: உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள கடுமையாக உழைப்பீர்கள்.
பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். நண்பர்களின் ஆதரவு உண்டு.
உத்திராடம் 1: திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டபடி செய்து முடித்து லாபம் காண்பீர்கள்

மகரம்: உத்திராடம் 2, 3, 4: துணிச்சலுடன் செயல்பட்டு நீண்டநாள் முயற்சி ஒன்றில் வெற்றி காண்பீர்கள்.
திருவோணம்: பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மற்றவர்கள் பாராட்டுவார்கள்.
அவிட்டம் 1, 2: புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்: அவிட்டம் 3, 4: தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சதயம்: சுறு சுறுப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். வரவேண்டிய பணம் வரும்.
பூரட்டாதி 1, 2, 3: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4: பிறரது பிரச்னைகளில் தலையிட வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
உத்திரட்டாதி: மனதில் குழப்ப நிலை உண்டாகும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.
ரேவதி: குடும்பத்திற்காக மேற்கொள்ளும் ஒரு முயற்சி இழுபறியாகும். செயலில் கவனம் தேவை.