இன்றைய ராசி பலன் – 10.09.2022

0
252

மேஷம்: அசுவினி : பண வரவில் இருந்த தடை விலகும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
பரணி : உங்கள் செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். பணம் பல வழிகளிலும் வரும்.
கார்த்திகை 1 : அறிமுகம் இல்லாதவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : ஆதாய முயற்சிக்கு பலன் அளிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
ரோகிணி: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
மிருகசீரிடம் 1, 2 : வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்து வளர்ச்சிக்கு வழி காண்பீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : உங்கள் திறமை வெளிப்படும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
திருவாதிரை : நினைத்ததை இன்று செய்து முடிப்பீர்கள். உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3 : தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கடன்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

கடகம்: புனர்பூசம் 4 : செயல்களில் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். கவனமான நாள்.
பூசம் : நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகும். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : மற்றவர்களிடம் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பொறுமை அவசியம்.

சிம்மம்: மகம் : உங்கள் முயற்சி நிறைவேறும். நண்பர்கள் உதவியால் லாபமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
பூரம் : மற்றவர்களின் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
உத்திரம் 1 : குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : வியாபாரத்தில் உண்டான தடை அகலும். உங்களுடைய முயற்சிகளில் லாபம் காண்பீர்கள்.
அஸ்தம் : மற்றவரின் மனதைப் புரிந்து செயல்படுவீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.
சித்திரை 1, 2 : தொழில் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள். லாபமான நாள்.

துலாம்: சித்திரை 3, 4 : பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
சுவாதி : உறவினர் ஒருவரால் சங்கடம் அடைவீர்கள். குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடு உண்டாகும்.
விசாகம் 1, 2, 3 : பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.நிதி நிலை சரியாகும்.

விருச்சிகம்: விசாகம் 4 : தாய்வழி உறவினர்களின் ஆதரவுடன் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.
அனுஷம் : தொழிலில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.
கேட்டை : பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். நிதி நிலை சரியாகும்.

தனுசு: மூலம் : கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் சரியாகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் இன்று வந்து சேரும்.
பூராடம் : நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திராடம் 1 : வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள். உங்கள் முயற்சிக்கு லாபம் கிடைக்கும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : உங்கள் திறமையால் தொழிலில் இருந்த போட்டி விலகும். லாபம் உயரும்.
திருவோணம் : வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ஆதாயமான நாள்.
அவிட்டம் 1, 2 : புதிய வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

கும்பம்: அவிட்டம் 3, 4 : புதிய பாதையில் பயணிப்பீர்கள். உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர்கள் விலகிச் செல்வர்.
சதயம் : பிரச்னைகளை சரி செய்வீர்கள். உங்கள் விருப்பப்படி இன்று செயல்பட்டு அதில் வெற்றி காண்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : தனியார் நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

மீனம்: பூரட்டாதி 4 : மனதில் இருந்து வந்த குழப்பம் விலகும். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள்.
உத்திரட்டாதி : உங்கள் தேவைகள் இன்று நிறைவேறும். குடும்பத்தினரால் வீண் செலவு அதிகரிக்கும்.
ரேவதி: உங்கள் முயற்சி இழுபறியாகும். திடீர் பயணமும் அலைச்சலும் உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here