இன்றைய ராசி பலன் – 25.10.2022

0
276

மேஷம்: அசுவினி: உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பரணி: எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள்
கார்த்திகை 1: உறவினருடன் ஏற்பட்ட சங்கடம் தீரும். செயல்களில் சாதகமான நிலை உண்டாகும்.
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: எதிர்பார்த்த ஆதாயம் வந்து சேரும். மனதில் தைரியம் பிறக்கும்.
ரோகிணி: தடைகளைச் சரிசெய்வீர்கள். முயற்சியில் உங்கள் முன்னேற்றம் உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முன்னோர் வழிபாடு மகிழ்ச்சி தரும். சுபச்செலவு அதிகரிக்கும். அதற்கேற்ப வரவு ஏற்படும்.
திருவாதிரை: எதிர்பார்த்த வருமானம் வரும். புதிய முயற்சி வெற்றி பெறும். பொன் பொருள் சேரும்.
புனர்பூசம் 1, 2, 3: நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். சொத்து பிரச்னை தீரும்.
கடகம்: புனர்பூசம் 4: தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.
பூசம்: நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.
ஆயில்யம்: உறவினர்களிடம் உண்டான சங்கடம் தீரும். விருந்தினர் வருகை தருவர்.
சிம்மம்: மகம்: உங்கள் செயல்களில் எதிர்பார்த்த வரவு வந்து சேரும் லாபமான நாள்.
பூரம்: பழைய பிரச்னைகளை சரிசெய்வீர்கள். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
உத்திரம் 1: திறமை வெளிப்படும். நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாபம் கிடைக்கும்.
கன்னி: உத்திரம் 2, 3, 4: வரவுகளில் இருந்த தடை அகலும். குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும்
அஸ்தம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
சித்திரை 1, 2: சிலருக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
துலாம்: சித்திரை 3, 4: இனம் புரியாத குழப்பம் உண்டாகும். எதிர்பாராத சம்பவம் நடைபெறும்.
சுவாதி: குடும்பத்தின் நலனுக்கான ஒரு முடிவை துணிச்சலுடன் மேற்கொள்வீர்கள்.
விசாகம் 1, 2, 3: உடன் பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பால் எண்ணம் நிறைவேறும்.
விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பாராத செலவு, அலைச்சல் உண்டாகும். செயலில் கவனம் வேண்டும்.
அனுஷம்: வாழ்க்கைத் துணையுடன் உண்டான பிரச்னை விலகி மகிழ்ச்சி அடைவீர்கள்.
கேட்டை: சுபநிகழ்ச்சி குறித்த பேச்சு உண்டாகும். திடீர் செலவுகளை சந்திப்பீர்கள்.
தனுசு: மூலம்: நிதி நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். திடீர்வரவால் மகிழ்வீர்கள்.
பூராடம்: திட்டமிட்டு செயல்பட்டு தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆதாயம் கூடும்.
உத்திராடம் 1: குடும்பத் தேவை நிறைவேறும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்து லாபம் காண்பீர்கள்.
திருவோணம்: போட்டியாளர் விலகிச் செல்வர். பொருளாதார நிலை உயரும். எண்ணம் நிறைவேறும்.
அவிட்டம் 1, 2: இழுபறியாக இருந்த செயலில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்
கும்பம்: அவிட்டம் 3, 4: நண்பர்களின் ஆதரவால் செயல் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சதயம்: நீண்ட நாளாக நீங்கள் எதிர்பார்த்திருந்த ஒரு தகவல் வந்து சேரும்.
பூரட்டாதி 1, 2, 3: நிறைவேறாது என நினைத்திருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும்.
மீனம்: பூரட்டாதி 4: பேச்சு, செயலில் கவனம் தேவை. யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
உத்திரட்டாதி: நினைப்பதை செயல்படுத்த முடியாமல் போகும். குழப்பம் அதிகரிக்கும்.
ரேவதி: கோபத்தை உண்டாக்கும் வகையில் சிலர் செயல்படுவர். நிதானம் அவசியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here