இன்றைய ராசி பலன் – 26,08,2022

0
217

மேஷம் : அசுவினி: புதிய முயற்சி ஒன்று நிறைவேறும். தாய்வழி உறவினர் உதவி செய்வர். வரவு அதிகரிக்கும்.
பரணி: மனம் விரும்பும் வகையில் செயல்படுவீர்கள். புதிய முயற்சி ஆதாயம் தரும். நிதிநிலை உயரும்.
கார்த்திகை 1: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உறவினரால் எண்ணம் நிறைவேறும். சிலர் வெளியூர் செல்ல நேரிடும்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தினருடன் அமர்ந்து எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள்.
ரோகிணி: குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: தடைகளைக் கடந்து செயல்படுவீர்கள். பெரியவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். நன்மையான நாள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: செயல்களில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினரின் தேவைக்காக செலவு செய்வீர்கள்.
திருவாதிரை: புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். நீண்டநாள் எண்ணம் ஒன்று பூர்த்தியாகும்.
புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தை விரிவு செய்ய பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பர்.

கடகம்: புனர்பூசம் 1, 2, 3: நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
பூசம்: மனதில் வீண் சிந்தனை உண்டாகும். தந்தை வழி உறவினரால் உங்கள் முயற்சி நிறைவேறும்.
ஆயில்யம் எதிரி தொல்லை அதிகரிக்கும். செயல்களில் வெற்றி பெற குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பீர்கள்.

சிம்மம்: மகம்: வீண் செலவு அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் நிலையைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுவர்.
பூரம்: குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்ய நவீன பொருள் வாங்குவீர்கள். செலவு கைமீறிச் செல்லும்.
உத்திரம் 1: வீடு, மனை வாங்கும் முயற்சி பலிதமாகும். வாகன வகையில் மராமத்துச் செலவு கூடும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: எதிர்பார்ப்பு நடந்தேறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதிய முயற்சி கை கொடுக்கும்.
அஸ்தம்: எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். நெருக்கடி மறையும். இனிய சம்பவத்தால் மகிழ்வீர்கள்.
சித்திரை 1, 2: கூட்டுத் தொழிலை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். நண்பர்கள் உங்கள் கருத்துடன் ஒத்துப் போவர்.

துலாம்: சித்திரை 3, 4: நண்பர்கள் உதவியுடன் முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
சுவாதி: உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாலினரின் உதவியால் நன்மை காண்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: போட்டிகளை சமாளிக்கும் வகையில் வியாபாரத்தில் மாற்றம் செய்வீர்கள். திறமை வெளிப்படும்.

விருச்சிகம்: விசாகம் 4: அறிவாற்றல் வெளிப்படும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். நன்மையான நாள்.
அனுஷம்: தந்தைவழி உறவுகளால் எண்ணம் நிறைவேறும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள்.
கேட்டை: குடும்பத்தினர் ஒத்துழைப்பர். முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுயதொழில் தொடங்கும் எண்ணம் ஏற்படும்.

தனுசு : மூலம்: நினைப்பதற்கு மாறாக சில செயல்கள் இன்று நடைபெறும். எதிரிகளின் கை மேலோங்கும்.
பூராடம்: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகும். முயற்சி இழுபறியாகும்.
உத்திராடம் 1: புதிய முயற்சிகள் நிறைவேறாமல் போகும். பொருளாதார நெருக்கடியால் சிரமம் உண்டாகலாம்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: புதிய சிந்தனை உருவாகும். நண்பர் ஆதரவால் நன்மை அடைவீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
திருவோணம்: குழப்பம் விலகும். எதிரியை அடையாளம் காண்பீர்கள். செலவிற்கேற்ற வரவு வரும்.
அவிட்டம் 1, 2: பணவரவு அதிகரிக்கும். முயற்சியில் வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் இருந்த பிரச்னைகள் விலகும்.

கும்பம்: அவிட்டம் 3, 4: செயல்களில் வெற்றி காண்பீர்கள். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகி சுறுசுறுப்படைவீர்கள்.
சதயம்: வாழ்க்கைத் துணையின் வழியே எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிரிகளின் செயல்களை முறியடிப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: முயற்சிகள் நிறைவேறும். விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்: பூரட்டாதி 4: அவசர வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வர்.
உத்திரட்டாதி: அதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள். வேலைப்பளுவால் உடலும் மனமும் சோர்வடையும்.
ரேவதி: பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திப்பீர்கள். குடும்பத்தினரால் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here