மேஷம்: அசுவினி: செயல்களில் இழுபறி நிலை உண்டாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
பரணி: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். எதிர்பார்ப்பில் ஏமாற்றம் உண்டாகும்.
கார்த்திகை 1: வியாபாரத்தில் நெருக்கடியை சந்திப்பீர்கள். மற்றவரை நம்ப வேண்டாம்

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரோகிணி: விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர்கள். நண்பரால் நன்மை உண்டு.
மிருகசீரிடம் 1, 2: புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். பொருளாதார நிலை உயரும்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: மறைமுக எதிரிகள் விலகிச் செல்வர். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
திருவாதிரை: வியாபாரத்தில் பணியாட்களை மாற்றுவீர்கள். வருமானத்தில் இருந்த தடை அகலும்.
புனர்பூசம் 1, 2, 3: பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள். புதிய முயற்சியால் லாபம் கிடைக்கும்.

கடகம்: புனர்பூசம் 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.
பூசம்: புதிய முயற்சி அனுகூலமாகும். விலகிச்சென்ற உறவுகள் இல்லம் தேடி வருவர்.
ஆயில்யம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைக் காண்பீர்கள். ஆடம்பர செலவு செய்வீர்கள்.

 

சிம்மம்: மகம்: விருப்பமான ஒருவரை இன்று சந்திப்பீர்கள். நினைத்ததை சாதிப்பீர்கள்.
பூரம்: வியாபார நுணுக்கம் அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். ஆதாயம் சேரும்.
உத்திரம் 1: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். நீண்டநாள் முயற்சி நிறைவேறும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: சொத்துப் பிரச்னை தீரும். நீங்கள் ஈடுபடும் செயல்கள் லாபமாகும்.
அஸ்தம்: சுய ஆற்றல் இன்று வெளிப்படும். துணிச்சலாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
சித்திரை 1, 2: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள். வருவாய் உயரும்.

துலாம்: சித்திரை 3, 4: இரண்டு நாட்களாக இருந்த சங்கடம் விலகும். வரவுகள் வந்து சேரும்.
சுவாதி: தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஆலய தரிசனம் மேற்கொள்வீர்கள்
விசாகம் 1, 2, 3: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர் வரவால் குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்: விசாகம் 4: மனதில் வீணான சிந்தனை உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
அனுஷம்: சிலர் உங்களைக் குறை சொல்வார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டாம்.
கேட்டை: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள்

தனுசு: மூலம்: வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அலைச்சல் அதிகரிக்கும் உங்கள் எதிர்பார்ப்பு தாமதமாகும்.
பூராடம்: எதிர்கால நலன் கருதி புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். செலவு அதிகரிக்கும்.
உத்திராடம் 1: கேளிக்கை, சந்தோஷம் என செலவு செய்வீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும்.

 

மகரம்: உத்திராடம் 2, 3, 4: எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்ட நாளாக சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள்.
திருவோணம்: உங்கள் செயல்களை பிறர் பாராட்டுவர். புதிய பொறுப்பு உங்களை வந்து சேரும்.
அவிட்டம் 1, 2: வியாபார வளர்ச்சிக்காக பாடுபடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்: அவிட்டம் 3, 4: பொது நலனில் கவனம் செல்லும். அரசியல்வாதிகள் செல்வாக்கு காண்பர்.
சதயம்: கூட்டு வியாபாரத்தில் ஆதாயம் உயரும். நண்பர்களுடன் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி தீரும். மனதில் நிம்மதி நிலவும்.
உத்திரட்டாதி: பணியிடத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். எண்ணம் நிறைவேறும்.
ரேவதி: நீண்ட நாளாக திட்டமிட்டிருந்த ஒரு வேலையை இன்று செய்து முடிப்பீர்கள்.