வவுனியா இ திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர்இ தனுஷ்கோடியை அடுத்த ஒன்றாம் தீடை பகுதிக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆணொருவரும் இரண்டு பெண், 4 சிறுவர்கள் உட்பட 7 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மரைன் பொலிஸார் விரைந்து சென்று அவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினால் பெரும் எண்ணிக்கையிலானோர் நாட்டை விட்டு தொடர்ச்சியாக தப்பிச் செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.