சப்ரகமுவ மாகாண கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும் மக்கள் நலன்புரி அமைப்பினால் மூன்றாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான நிகழ்வு நேற்று (25) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.

இதன்போது , பெரும்பாலானோர் இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினர்.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்தின் செயலாளர் சஞ்ஜீவ கொடல்லவத்த மற்றும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தாதியர்கள் உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சிவா ஸ்ரீதரராவ் –