திருகோணமலை – கொழும்பு இரவு நேர தபால் புகையிரதம் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. திருகோணமலை புகையிரத நிலைய அதிபர் இதனைத் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக, திருகோணமலை-கொழும்பு புகையிரதம் கல்ஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனவே திருகோணமலையில் இருந்து வரும் பயணிகள் மட்டக்களப்பில் இருந்து வரும் இரவு நேர தபால் ரயிலுக்கு மாற்ற வேண்டியிருந்தது.