இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு

0
112

இலங்கை இராணுவத்தின் 60 ஆவது தலைமைத் தளபதியாக இராணுவத்தின் தற்போதைய பிரதிப் பிரதானியான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு நியமிக்கப்பட்டிருப்பதுடன், நாளை புதன்கிழமை தொடக்கம் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரியவருகிறது.

மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு இன்று செவ்வாய்க்கிழமை மாலை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் நாள் இலங்கை இராணுவத்தின் பிரதிப் படைத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மற்றும் பல முக்கிய பதவிகளை வகித்தார். மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு இலங்கை காலாட்படை படைப்பிரிவின் தளபதியாகவும் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here