பாடசாலையொன்றின் ஆசிரியர் ஓய்வறையில் வைத்து சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 24 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை ஆசிரியரின் ஓய்வறையில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமி தனது தாயிடம் கூறியதை அடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவ வீரர் ஒருவரோ இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டதாகவும் பாடசாலை நேரத்தின் பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.