இருளில் மூழ்கிய நுவரெலியா பிரதான  பேருந்து தரிப்பிடம்-பயணிகள்- வியாபாரிகள் பாதிப்பு 

0
234
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது உரிய முறையில் மாதாந்த மின் கட்டணத்தினை செலுத்தாத காரணத்தால் நுவரெலியா மின்சார சபையின் மூலம் இவ் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதனால் பிரதான பேருந்து தரிப்பிடத்தில் பயணிகளின் பணப்பைகள் பயணப்பைகள் ,தங்க ஆபரணங்களையும் களவாடப்படுவதாகபொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் இதே நேரம் பேருந்து தரிப்பிடத்தில் உள்ள வியாபார நிலையங்களில் மின்சாரம் இன்றி பயணிகளின் வருகை இன்றி வியாபாரம் மந்தநிலையில் உள்ளதாக வியாபரிகள் தெரிவிக்கின்றனர்
நுவரெலியா பேருந்து நிலையத்தில் இருந்து கொழும்பு ,கண்டி மற்றும் யாழ்ப்பாணம் செல்லும் பேருந்துகள் அனைத்தக்கும் பயணிகளின் வருகை இன்றி இயக்கப்படாமல் நிறுத்தப்படும் சூழ்நிலை உள்ளதாக பேருந்து உரிமையாளர் தெரிவிக்கின்றனர் . இதனால் வழக்கமாகப் பயணிகளின் கூட்டத்தால் இரவு முழுவதும் பரபரப்பாக இயங்கி வரும் நுவரெலியா பேருந்து நிலையம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகிறது
எனவே பயணிகளின் நலன் கருதியும் , வியாபாரிகளின் நிலைமை கருதியும் பேருந்து உரிமையாளர்களின் நன்மை கருதியும் நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்துக்கு சொந்தமான காரியாலயத்தின் மூலம் மின்சார சபைக்கு உரிய பணத்தினை செலுத்தி மின்சாரத்தை பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
டி.சந்ரு , திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here