அம்பியூலன்ஸ் வசதி இல்லாதமையினால் 4 வயது சிறுமியின் சடலத்தை தந்தையொருவர் தோளில் சுமந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இச்சம்பவம் இந்தியாவின் சாட்டபூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் அம்பியூலன்ஸ் வசதி இல்லாததால் மகளின் சடலத்தை தோளில் சுமந்து சென்றுள்ளார்.

குறித்த சிறுமி உடல் நலக் குறைவால் சாட்டபூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தனது மகளின் சடலத்தை கொண்டுச் சொல்வதற்கு அம்பியூலன்ஸ் வசதி இல்லாமையினால் தோளில் சுமந்து சென்றார் இந்த அப்பாவி தந்தை.