பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மகாராணியின் இறுதிக்கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார்.

ஜனாதிபதி எதிர்வரும் 17 அல்லது 18 ஆம் திகதி பிரித்தானியாவுக்கு பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகள் நடைபெறும் 19ஆம் திகதி இலங்கையில் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.