இலக்கியத்துக்கான 2022 ஆம் ஆண்டு நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த அனி ஏர்னோக்ஸுக்கு (Annie Ernaux)   வழங்கப்படவுள்ளது.

நோபல் பரிசுக்குரியவருக்கு ஒரு பதக்கமும் 10 மில்லியன் சுவீடிஷ் குரோனர்களும் (911,400 அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படும்.

82 வயதான அனி ஏர்னோவுக்கு நோபல் பரிசு வழங்கப்படலாம் என கடந்த பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இவர் இலக்கிய்ததுறை பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்த்ககது,

1901 ஆம் ஆண்டு முதல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற 119 பேரில், இவ்விருதை பெறும் 17 ஆவது பெண் அனி ஏர்னோ ஆவார்.