ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கட் சம்பியன் பட்டம் மற்றும் 12ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன் பட்டம் வென்ற 2 இலங்கை அணியினரும் சற்று முன் நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பளிக்கப் பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

விளையாட்டு வீர வீராங்கனைகள், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மைட்லண்ட் பிளேஸில் உள்ள இலங்கை கிரிக்கெட் தலைமை அலுவலகம் மற்றும் விளையாட்டு அமைச்சின் வளாகத்தில் உள்ள வலைப்பந்து சம்மேளன தலைமையகத்திற்கு விசேட வாகனப் பேரணியில் அழைத்து வரப்படுவார்கள்.