17 வயதுக்குட்பட்ட இலங்கைத் தேசிய உதைபந்தாட்ட அணிக்கு கொழும்பு 12 அல்ஹிக்மா கல்லூரி(தேசிய பாடசாலை) மாணவன் முஹம்மது பாஸில் ஹஸன் முஹம்மது பாதிஹ் தெரிவாகியுள்ளார்.

அண்மையில் தேசிய ரீதியில் நடைபெற்ற தெரிவுப்போட்டிகளில் உள்வாங்கப்பட்ட முப்பது வீரர்களில் ஒருவரான பாதிஹ் பயிற்சிகளின் பின் இறுதித் தேர்வில் தெரிவாகினார்.

இலங்கையில் நடைபெறவிருக்கும் தெற்காசிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இலங்கை சார்பில் பங்களாதேஷ்-இலங்கைக்கிடையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறும் 17 வயதுக்குட்பட்டோர் அணியில் களமிறங்குகிறார்.

கல்லூரி விளையாட்டில் கழகத்தின் ஆர்வமிக்க வீரரான பாதிஹ்பல்வேறு உதைபந்தாட்ட போட்டிகளில் பிரகாசிக்கும் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.கல்லூரி அதிபர் எம்.முஸ்தபா மஃஸூர்   வழிகாட்டலில் அல் – ஹிக்மா பழைய மாணவர் சங்கத்தின் அணுசரனையில் விளையாட்டுத்துறை ஊக்குவிப்புக்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.