ஜனாதிபதி கோத்தபாய நாட்டை விட்டு வெளியேறியதை இலங்கை அதிகாரிகளை மேற்கோள் காட்டி AFP செய்திச்சேவை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை இராணுவத்துக்கு சொந்தமான அன்ரனோவ்-32 விமானத்தில் தனது மனைவியோடு பயணமான அவர் மாலைதீவு நேரம் காலை 2.50 இற்கு மலே நகரை சென்றடைந்ததாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் நாட்டை விட்டு அமெரிக்கா நோக்கி சென்றுள்ளதாக BBC தெரிவித்துள்ளது.