இசைஞானி இளையராஜா தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் பலர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர். பிரபல பாடகர்களான, ஸ்வேதா மேனன், எஸ்பிபி சரண் ஆகியோரும் வருகைதந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பேர்னில் 17, 18 ஆம் திகதிகளில் இளையராஜா தலைமையிலான குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சியில் பல கேற்பதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து கொழும்பு ஊடாகவே அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்துள்ளனர்.