‘மூத்த மலையாள நடிகர் மம்முட்டியை சந்தித்தது பெருமையாக இருந்தது. நீங்கள் தான் உண்மையான சூப்பர் ஸ்டார். இலங்கை வந்ததற்கு நன்றி என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இலங்கையின் சுற்றுலாத் தூதுவருமான சனத் ஜயசூரிய தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெறும் படப்பிடிப்பிற்காக வருகை தந்திருக்கும் இந்திய திரைப்பட நடிகர் மம்முட்டியை சந்தித்தப்பின்னர் அவர் பதிவிட்டுள்ள குறிப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைத்து இந்திய நட்சத்திரங்களையும் நண்பர்களையும் எங்கள் நாட்டை பார்க்க அழைக்க விரும்புகிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.