நாட்டின் 22 வீதமான மக்களுக்கு உணவு உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட இணைப்பாளர் ஹென்ன சிங்கர் ஹெம்டே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இரசாயன உரப் பற்றாக்குறையினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதனால் உர வகைகளின் விலைகள் 60 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.