இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 ஆவது தினத்தையிட்டு பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்ட இலங்கை பொலிஸ் சேவையின் முதலாவது பொலிஸ் மா அதிபராக ஸ்ரீமத் ஜீ. டபிள்யூ. ஆர். கெம்பல் 1866 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்பட்டார்.

இன்று காலை பொலிஸ் மாஅதிபரின் தலைமையில் சர்வமத வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று  மத வழிபாட்டு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாகத் தெரிய வருகிறது.