இலங்கை வெளிநாட்டுச் சேவையின் மூன்றாம் தரத்திற்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப்  பரீட்சை திட்டமிட்டபடி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

60 மத்திய நிலையங்களில் இன்று காலை 9.00 மணிக்கு பரீட்சை நடைபெறும். எரிபொருள் நெருக்கடியினால் தாமதமாக வருகை தரும் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.