24 வயதுடைய தாய்க்கு ஒரேசூலிழ் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது. புத்தளம் வைத்தியசாலையில் முதல் தடவையாக நான்கு சிசுக்கள் பிறந்துள்ளன. புத்தளம் வைத்தியசாலையின் பணிப்பாளர் சுமித் அன்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இவ்வாறு பிறந்த சிசுக்களில் ஒரு ஆண் சிசுவும், மூன்று பெண் சிசுவும் அடங்குவதாக வைத்தியசாலை பணிப்பாளர் கூறுகின்றார்.
தற்போது குறித்த நான்கு சிசுக்களும் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் சிறுவர்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணரின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.