உடனடியாக தேர்தலை நடத்துக: முன்னாள் தேர்தல் ஆணையாளர்

0
296
அரச தலைவர் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் மக்கள் வழங்கிய ஆணை இரத்தாகி விட்டது என்றும் உடனடியாக தேர்தலை நடத்துமாறும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த அரச தலைவர் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் மக்கள் வழங்கிய ஆணை தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் பொதுத் தேர்தலை நடத்தி புதிய தேர்தலுக்கு வழி வகை செய்ய வேண்டும்.
ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான செலவை ஏற்க நிறுவனங்கள் இருக்கின்றன. அதற்கு ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை உதாரணமாகச் சுட்டிக்காட்ட முடியும்.
எந்தவொரு கொடுப்பனவும் பெறாமல் தேர்தல் கடமைகளில் ஈடுபடத் தயார் என அரச அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தலை நடத்துவது பெரிய பிரச்சினையாக இருக்காது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here