உடல் ஊனத்தை பொருட்படுத்தாது கல்வியில் சாதனை பயணத்தில் பொகவந்தலாவை திலிப் -வீடியோ இணைப்பு

0
1148

சந்தனம் திலிப் குமார், இவர் நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவை டின்சின் தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட சந்தனம் திலிப் குமார் பொகவந்தலாவை டின்சின் தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்று வருகிறார்.

இவரின் தாய், தந்தையினர் ஒரு தோட்டத் தொழிலாளி குடும்பத்தில் கடைசி பிள்ளையான சந்தனம் திலிப் குமார் தனது இடது காலை இழந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகின்றன.

தனது தாயார் தேயிலை மழையில் தொழில் புரிந்து கொண்டிருந்த நிலையில் தனது தாயாருக்கு காலை நேர உணவினை எடுத்து சென்ற வேளை நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவை வரையிலான பிரதான வீதியினை அகலப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு கொண்டிருந்த போது பாரிய கற்பாறை ஒன்று சரிந்த விழுந்ததில் திலிப்குமாரின் வலது கால் துண்டிக்கப்பட்டது.

இருந்த போதிலும் திலிப் குமார் சோர்ந்து விடாமல் ஊண்று கோலினை பயன்படுத்தி தனது கல்வி நடவடிக்கையினை தொடர்ந்து கொண்டிருந்தாலும் இந்த இரண்டு வருட காலப்பகுதியில் இந்த மாணவனுக்கு உதவி கரம் நீட்ட எவரும் முன்வரவில்லை.

சந்தனம் திலிப் குமார் என்ற இந்த மாணவன் விளையாட்டு துறையிலும் திறமையானவர் சமுகத்தில் ஒரு சிறந்த ஆசியராக வரவேண்டும் என்பதே இவரின் ஆசை.

Your Community Foundation Srilanka என்ற நிறுவனம் ஒன்று திலிப் குமாருக்கு செயற்கை கால் ஒன்றினை பொருத்துவதற்கு முன் வந்துள்ளது. மலையகத்தில் இதுபோல் கால்களை இழந்து கல்வி துறையில் தமது திறமையினை காட்டு மாணவர்கள் இன்னும் எமது சமுகத்தில் இருந்தாலும் அவர்களை மலையக அரசியல் வாதிகள் கண்டு கொள்வதில்லை .

இதேவேளை இந்த நிறுவனத்தின் ஊடாக தமக்கு செயற்கை கால் கிடைக்க போகும் என்ற சந்தோசத்தில் அவரின் குடும்பம் Your Community Foundation Srilanka நன்றிகளையும் தெரிவித்து கொண்டனர்.

பொகவந்தலாவ -எஸ் சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here