உணவு கேட்ட கணவனுக்கு உணவை கொடுக்காமல் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த மனைவி, கணவனால் கோடாரி தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். நுவரெலியா ஒலிபென்ட் மேல்பிரிவு தோட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், மேலும் தெரியவருவதாவது,

இருவரும் தனது வீட்டில் இருந்துள்ள நிலையில் கனவன் உணவு எடுத்துவருமாறு மனவியிடம் கூறியுள்ளர். நீண்ட நேரம் உணவு எடுத்து வராது, மனைவி தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருப்பதை கண்டதையடுத்து, கணவன் மனைவிக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் கணவனை மனைவி தாக்கியதையடுத்து, கனவன் அருகிலிருந்த கோடரியால் மனைவியை தாக்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்நிலையில், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், சந்தேக நபரான கணவன் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் காலை சரணடைந்துள்ளார்.

தாக்குதலில் 07, 09 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சுப்ரமணியம் சத்யவாணி என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.