உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றார் ஜனாதிபதி ரணில் – வீடியோ இணைப்பு

0
232

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தற்போது உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றார்.

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றார்.

பாராளுமன்றத்தை வந்தடைந்த அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் பாராளுமன்றத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

பாராளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்ரமசிங்க 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here