உலக செல்வந்தர்களில் இராண்டாம் இடத்தில் இந்தியர்

0
234

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் இந்தியாவின் கௌதம் அதானி 2 ஆவது இடத்துக்கு இன்று முன்னேறினார்.

60 வயதான கௌதம் அதானி சில வாரங்களுக்கு முன்னர் அப்பட்டியலில் 3 ஆவது இடத்தை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி ட்ரான்ஸ்மிஷன் உள்ளிட்டபங்குகளின் பெறுமதி பங்குச் சந்தையில் வெகுவாக உயர்ந்தது. இதனால் அதானியின் சொத்து மதிப்பு 155.7 பில்லியன் டொலர்களாக அதிகரித்தது.

இதனால் போர்ப்ஸ் சஞ்சிகையின் செல்வந்தர்களின் பட்டியலில் அதானி இரண்டாவது இடத்தைப் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here