எட்டியாந்தோட்டை கந்தலோயா தமிழ் வித்தியாலயத்தில் பஸ் நூலகம் ஒன்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவினால் நேற்று முன்தினம்(7) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பழுதடைந்து ஒதுக்கப்பட்ட பஸ் வண்டியை பயன்படுத்தி அதில் பஸ் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு  (7) திறந்து வைக்கப்பட்டது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, அதி கஷ்டப் பிரதேச பாடசாலைகளை மையமாக கொண்டு பழுதடைந்து ஒதுக்கப்பட்ட இ.போ.ச க்கு சொந்தமான பஸ் வண்டிகளை பயன்படுத்தி அதில் நூலகம் அமைக்கும் திட்டத்தை முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அரம்பித்து வைக்கப்பட்டது.

இத் திட்டத்திற்கு இலங்கை போக்குவரத்துச் சபை, இலங்கை தொலைபேசி நிறுவனம், நூலக சேவை நிலையம் என்பன ஒன்றினைந்து மேற்படி பஸ் நூலம் அமைக்கும் வேலைத்திட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து வருகின்றது.

எஹலியகொடை விஜய குமாரதுங்க வித்தியாலயத்திலும் இவ்வாறான பஸ் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு அன்மையில் திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி அமைக்கப்பட்டுள்ள பஸ் நூலகத்தின் மூலம் மாணவர்கள் தமது முழுமையான வாசிப்பு திறனை முன்னெடுக்க வேண்டும் என்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

இதன்போது மேற்படி பாடசாலை மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்ரமசிங்கää சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுஜானி விஜேதுங்க, மாகாண ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் மஞ்சுலா இதிகாவெல, எட்டியாந்தோட்டை கந்தலோயா தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் எம்.கருணாகரன் உட்பட அரச அதிகாரிகள் பாடசாலை அசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவா ஸ்ரீதரராவ் –