எண்ணெய்க்கிடங்கில் தீ : 35 பேர் வரை பலி

0
159

பங்களாதேஷில் கொள்கலன் கிடங்கில் ஏற்பட்ட நேற்று சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்தில் தீயில் சிக்கி 35 பெர் வரை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவத்தில் 170 பேருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்த அருகில் உள்ள பல கொள்கலன்கள் வெடித்ததாகக் கூறப்படுகின்றது.

இச்சம்பவத்தில் தீயணைப்பாளர்கள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த பலர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் கூறினர்
இரசாயன கசிவினால் தீ ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here