பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியல், இத்திரைப்படம் இந்தியா, இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியது.

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 1′ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியது. பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின்செல்வன்’.

இரண்டு பாகங்களாக தயாரிக்கப்படும் இப்படத்தில் விக்ரம், ஜஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, கார்த்தி,  திரிஷா சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.