நீதிமன்ற அவமதிப்பு குறித்து சத்தியக் கடதாசியூடாக இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரியுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளை அல்லது திங்களன்று விடுதலையாவார் என்று தான் நம்புவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த பதிவில் , எனது அன்புக்குரிய அரசியல் நண்பன் ரஞ்சன் ராமநாயக்க நாளை அல்லது 29 ஆம் திகதி திங்கட்கிழமை விடுதலையாவார் என நம்புகிறேன்.

என்னுடையதும் , மனுஷ நாணயக்காரவினதும் கோரிக்கையை ஏற்று அதனை நிறைவேற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் , ஒத்துழைப்புக்களை வழங்கிய ஏனைய அனைவருக்கும் நன்றி.’ என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.