எனது வாக்கை நமது அணிக்கு அளித்தேன்

0
564

எமது தமிழ் மக்கள் நலன்களை முன்னிலைப்படுத்தி ஒத்துழைக்கிறோம்..! இருந்த இடத்தில் இருந்தபடி ஒத்துழைக்கிறோம் என மனோ எம்.பி புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தன்னுடைய முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஜனாதிபதி வாழ்த்துக்கள், ஜனாதிபதி -தெரிவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களே! இலங்கையில், உங்களை நீண்டகாலமாக நன்கறிந்த, தமிழ் அரசியல்வாதி நான்தான்.
என் வழி, எப்போதும் கொள்கை-வழி. அது உங்களுக்கு தெரியும். அதனால்தான் நான் எனது வாக்கை நமது அணிக்கு அளித்தேன். கொள்கை வழி காரணமாகத்தான்,

உங்கள் கஷ்டமான காலங்களிலும் உங்களுக்கு துணையிருந்தேன். இன்றும் நான் இருக்கும் இடத்தில் இருக்கிறேன். அப்போதும், இப்போதும் நான் விலை போவதில்லை. எனினும் நாட்டை அடுத்துவரும் வருடங்களில் முன்நடத்துங்கள். ஒத்துழைப்பு ஏற்கனவே கேட்டு விட்டீர்கள்..! என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here