‘என்னைத் தேட வேண்டாம்…’ என கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு 12 வயதுடைய சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரியவருகிறது. வீட்டில் இருந்த பணம், தந்தையின் தொலைபேசி என்பன காணாமல் போயுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மூங்கிலாற்று பகுதியிலேயே இவ்வாறு சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4ஆம் திகதி இரவு நித்திரைக்குச் சென்ற சிறுமி அதிகாலையில் வீட்டில் இல்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி, டிக்டொக் மூலம் ஹட்டன் பகுதியினை சேர்ந்த ஒருவரை காதலித்துள்ளதாகவும், இதன்படி காதலனை தேடி சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.