எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு செல்லும் வரிசையில் காத்திருந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி உள்ள எரிபொருள் நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் ஹபராதுவ, யத்தகல பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வரிசையில் காத்திருந்த மூன்று பேரும், மோதலில் ஈடுபட வந்த குழுவைச் சேர்ந்த ஒருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.