எரிபொருள் நிலையத்தில் மோதல் ஆறு பொலிஸார் வைத்தியசாலையில் 9 பேர் கைது – வீடியோ இணைப்பு

0
303

அதுருகிரியவில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெற்றோல், தீர்ந்துவிட்ட போதிலும், எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த சிலர் எரிபொருளைக் கோரி குறித்த பகுதியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது கைகலப்பாகவும் மாறியுள்ளது.

இதனையடுத்து சம்பவத்தில் 6 பொலிஸார் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று கடுவெல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here