எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது. பாணந்துறை வேகட பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலேயெ இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

55 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.