எலிசபெத் மகாராணியின் இறுதி அஞ்சலி நிகழ்வின் – நேரடி ஒளிபரப்பு -படங்களும் இணைப்பு

0
343

மறைந்த 2ஆம் எலிசபெத் மகாராணியின் உடல், இன்று மாலை ராஜ மரியாதையுடன் அவரது கணவர் பிலிப் கல்லறை அருகே நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி பைடன் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் குவிந்துள்ளதால், லண்டனில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மைரா அரண்மனையில் கடந்த 8ம் தேதி 2ம் எலிசபெத் மகாராணி , தனது 96வது வயதில் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல், லண்டன் கொண்டு வரப்பட்டு, வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது. இதில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய குடியரசு தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இன்று காலை தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு, 2ம் எலிசபெத் மகாராணி உடல் வைக்கப்பட்டிருந்த பேழை, வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து ராஜ மரியாதையுடன் இறுதி சடங்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மகாராணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டதும், பிரிட்டன் முழுவதும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் முழுவதும் இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இறுதி சடங்கில் சுமார் 10 இலட்சம் பேர் வரை பங்கேற்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதால், மேலதிக புகையிரதங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

1965ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வின்ஸ்டர் சர்ச்சிள் உடல், அரசு மரியாதைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து தற்போதுதான் முதன்முறையாக அரசு மரியாதைப்படி நல்லடக்கம் செய்யும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here