இலங்கை உட்பட ஏழு நாடுகள் பங்குபற்றும் மகளிர் இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி பங்களாதேஷின் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

2018க்குப் பின்னர் பங்களாதேஷில் மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பது இதுவே முதல் தடவையாகும்.

மேலும் 2014 இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் சில்ஹெட் விளையாட்டரங்கு அரங்கேற்றவுள்ள முதலாவது மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும்.

கடைசியாக மலேசியாவில் 2018இல் நடைபெற்ற மகளிர் ஆசிய கிண்ண இருபது 20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவை 3 விக்கெட்களால் வெற்றிகொண்டு பங்களாதேஷ் சம்பியனாகியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.