ஐந்து நாட்களாக வரிசையில் நின்றவர் மயங்கி விழுந்து மரணம்

0
292

பெற்றோல் வரிசையில் நின்று விட்டு களைப்பாறுவதற்காகச் சென்றவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 5 தினங்களாக பெற்றோல் வழங்கப்படாத நிலையில் மோட்டர் சைக்கிளை அரச உத்தியோகத்தர்களுக்கான வரிசையில் நிறுத்தி விட்டு ஒருவர் எரிபொருளுக்காக காத்து நின்றுள்ளார்.

இந்நிலையில், இன்றும் பெற்றோல் கிடைக்காமையால் நீண்ட நேரம் வரிசையில் நின்று விட்டு இளைப்பாறுவதற்காக நகரசபை முன்பாக உள்ள கடைப் பகுதிக்கு சென்றபோது குறித்த நபர் மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here