ஐவரின் உயிரைக் காவுகொண்ட பொழுது போக்கு படகுகள்

0
248

இரு பொழுதுபோக்கு படகுகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவமொன்று அமெரிக்கா ஜார்ஜியா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வார இறுதி நாளையொட்டி வில்மிங்டன் நதியில் பொது மக்கள் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.

இதன்போது எதிர்பாராத விதமாக இரு படகுகள் நேருக்கு நேர் மோதி நதியில் கவிழ்ந்தது. நீரில் மூழ்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர்.

4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படை நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here