ஒட்சிசன் சிலிண்டருடன் மரதன் போட்டியில் கலந்து கொண்டு சாதனை

0
178

ஒட்சிசன் சிலிண்டருடன் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட முதல் மனிதர் என்ற சாதனையை பிரித்தானியாவைச் சேர்ந்த டிவன் ஹலாய்  என்பவர் நிகழ்த்தியுள்ளார்.

37 வயதான டிவனுக்கு 2020-ஆம் ஆண்டு இடைநிலை நுரையீரல் நோய் (IDL) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சுவாசிப்பது மற்றும் இரத்த ஓட்டத்தில் ஒட்சிசனைப் பெறுவது கடினமான விடயம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து 2021 , ஆகஸ்ட் மாதம் அவர் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லும் வகையில் ஒட்சிசன் சிலிண்டர் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓட்டப்பந்தய வீரரான அவர் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் விதமாக மரதன் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here