ஒரு சில அதிபர், ஆசிரியர்களின் தவறான செயற்பாடுகள் ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்துக்கே அவப்பெயர் என்கிறார் ஜீவன் எம்.பி

0
311

போகாவத்தை பாடசாலை அதிபர் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியொருவரை அடித்த சம்பவத்தை அடுத்து குறித்த அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிபர் ஆசிரியர் தின விழாவுக்காக 300 ரூபாவை செலுத்தாத காரணத்தினால் மாணவியொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்திவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.

பாடசாலையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்காக பணம் அறவிடுதல் முறையாகாது. இதனைக் காரணம் காட்டி மாணவர்களை அடிப்பதோ, திட்டுவதோ நியாயமானதல்ல.

இவ்வாறான விடயங்கள் உங்களது பாடசாலைகளில் இடம்பெறுமானால், அது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடமோ அல்லது பொலிஸ் நிலையங்களிலோ முறைப்பாடு செய்யுங்கள். இது சமூகப் பிரச்சினையாகும், இதனை அரசியல்வாதிகள் தலையிட்டு தீர்க்கும் பிரச்சினை அல்ல.

ஒரு சில அதிபர், ஆசிரியர்களின் தவறான செயற்பாடுகள் ஒட்டு மொத்த அதிபர், ஆசிரியர்களுக்கும் அவப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறது. ” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here