தாமரை கோபுரம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைகின்ற நிலையில் 173,320 பேர் தாமரை கோபுரத்தை பார்வையிட வருகைத் தந்துள்ளதாக தாமரை கோபுரம் முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவிக்கின்றது.

இந்த ஒரு மாத காலப் பகுதியில் மாத்திரம் 90 மில்லியன் ரூபா (9 கோடி ரூபா) வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.