ஒரே நாளில் 2612 பேர் வருகை ; 15 இலட்சம் ரூபா வருமானம்

0
234

350  மீற்றர் உயரமான கொழும்பு தாமரை கோபுரம் பொதுமக்கள் பார்வைக்கு நேற்று வியாழக்கிழமை திறந்துவிடப்பட்ட நிலையில்,  2612 வருகைதந்துள்ளதாகவும் இதனூடாக முதல் நாளிலே  15இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் கொழும்பு லோட்டஸ் டவர் மெனேஜ்மென்ட் கம்பனியின் (Colombo Lotus Tower Management Company ) பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இக்கோபுரத்தை பார்வையிடுவதற்காக 500 ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது. வரிசையில் காத்திருக்காமல் நேரடியாக 7 ஆவது மாடியிலுள்ள அவதானிப்பு தளத்துக்கு செல்வதற்கான ‘எக்ஸ்பிரஸ் ரிக்கெட்’ 2000 ரூபா விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. வெளிநாட்டவர்களுக்கு 20 டொலர் கட்டணம் அறிவிடப்படுகிறது.

வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணிவரையும் வார இறுதி நாட்களில் நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையும் இக்கோபுரம் திறந்திருக்கும்.

3 கட்டங்களாக இக்கோபுரம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது கட்ட திறப்பு விழாவ 2 மாதங்களுக்குள் நடைபெறும் எனவும் 3 ஆவது கட்ட திறப்பு விழா எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

113 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் தாமரை கோபுர கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. தெற்காசியாவின் மிக உயரமான கட்டடம் இதுவாகும்.

ஆசியாவின் 11 ஆவது மிக உயரமான கட்டடமாகவும் உலகின் மிக உயரமான கட்டடமாகவும் இது விளங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here