ஓகஸ்ட் அல்லது செப்ரெம்பரில் முன்னாள் அரச தலைவரான கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு மீண்டும் திரும்புவார் என்று சிங்கள வார இறுதி ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த வார ஏட்டில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக இம்மாத இறுதியில் சவூதி அரேபியா செல்லவுள்ளார்.
ஓகஸ்ட் மாத கடைசி வாரம் அல்லது செப்ரெம்பர் மாத தொடக்க வாரத்தில் அவர் இலங்கை  திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.