மேல் மாகாணத்தில் ஜூன் 29 முதல் காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு ஓகஸ்ட் 31 வரை தண்டப்பணம் அறவிடப்படாது என, மேல் மாகாண பிரதான செயலாளர் ஜே.எம்.சி. ஜயந்தி விஜேதுங்க அறிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது எரிபொருள் தொடர்பான சிக்கல்கள் வழமைக்கு திரும்பியுள்ளதால் வாரத்தின் 5 நாட்களும் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்கவும் தீர்மானித்துள்ளளோம்.

அத்துடன், மேல் மாகாண மோட்டார் வாகன திணைக்களத்தின் இணையத்தளமான motortraffic.wp.gov.lk ஊடாக ஒன்லைன் மூலமாக மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.